--- --:--:-- --

ஓ‌டி‌டிக்கு எதிரான பிரச்சினை: நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் பாரதி ராஜா ஆதரவு..!

6

ஓ‌டி‌டிக்கு எதிரான பிரச்சினையை சூர்யா என்ற தனி நபருக்கு எதிரான பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விஷயம் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். சூர்யா நடித்து தயாரித்துள்ள சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

 

இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஓ‌டி‌டி போன்ற மாற்று தளங்களைத் தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத் துறையில் முதலீடு செய்வது ஒரு சிலரே அதில் சூர்யா குறிப்பிடத் தக்கவர் என்று சுட்டிக் காட்டியுள்ளார். தியேட்டர் டிக்கெட் விற்பனையை தயாரிப்பாளர்கள் அறிந்துகொள்ளும் விதமாக இணையதளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon