--- --:--:-- --

தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை என கூறியுள்ள பாகிஸ்தான் அரசு..!

10

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான வீடுகளில் முகவரிகளும் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

 

ஆனால் இதை மறுத்துள்ள பாகிஸ்தான் இதுபோன்ற பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றும் தாவூத் இப்ராகிமின் பட்டியலில் முதலில் இருந்தே இடம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon