--- --:--:-- --

ஓட்டுநர் உரிமம் டிசம்பர் வரை செல்லும் என அறிவித்துள்ள மத்திய அரசு..!

1

கொரொனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை வரும் டிசம்பர் மாதம் வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரொனா வைரஸ் பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக மக்கள் வெளியே வர முடியாத சூழல் உள்ளது. இதனால் ஓட்டுனர் உரிமம், வாகன சான்று ஆகியவற்றை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

எனவே பிப்ரவரி 1-ம் தேதியுடன் காலாவதி ஆன அனைத்து சான்றுகளும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல காலவதியாகும் ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் டிசம்பர் வரை செல்லத்தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா பாதிப்பு இருக்கும் சூழலில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon