--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 5967 பேருக்கு கொரோனா பாதிப்பு…! உயிரிழந்தோர் 97 பேர்!!

2.1

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பும் 97 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த ஒரு மாதமாகவே ஏற்றம் இறக்கமின்றி ஒரே மாதிரியாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்திற்குள்ளும், உயிரிழப்பு 100 என்ற அளவிலும் பதிவாகி வருகிறது.

 

இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 5967 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்
தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,129ஆகும். இதன் மூலம் இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 3,25,456ஆக உயர்ந்துள்ளது.

 

இன்றும் நேற்றைப் போலவே உயிரிழப்பு நூறுக்கு கீழாக 97 என பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்து உள்ளது. மேலும். சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்தே பதிவாகி வருகிறது.

 

இன்றும் 1,277 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 1,26,677 ஆக உயர்ந்துள்ளது. இது வரை, தமிழகம் முழுவதும் 41,31,604 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மட்டும், 67,980 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

இன்று சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகபட்சமாக 387 பேருக்கும், கடலூரில் 370, திருவள்ளுரில் 320, செங்கல்பட்டில் 306 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon