--- --:--:-- --

காளையார்கோவிலில் திமுகவினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..!

14

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் மற்றும் நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட, திமுகவில் மாமா வேலை பார்த்து ஒன்றிய பதவிகளை வாங்கிய மாமாக்களுக்கு வாழ்த்துக்கள் என்ற சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து திமுக முன்னாள் சேர்மன் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளரான மேப்பல் சக்தி அவர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது: நான் கட்சியின் உண்மையான விசுவாசி. தளபதி அவர்களின் தலைமையில் நடக்கும் திமுகவை கோவிலாக நினைப்பவன்.

 

எனவே மாமாக்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்ட வால்போஸ்டர்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதை யாரோ என் போன்றவர்களின் பெயர்களை கெடுக்க உள்நோக்கத்தோடு செய்த வேலை என்றுதான் கருதுகிறேன்.

 

திமுக கட்சி மூலம் காளையார்கோவில் ஒன்றிய சேர்மனாகவும், ஒன்றியச் செயலாளராகவும் இருந்து கட்சிப்பணி ஆற்றி இருக்கிறேன். கட்சிக்காக முடிந்த அளவு பாடுபட்டு இருக்கிறேன். இந்நிலையில் நானும் எனது ஆதரவாளரான தெற்கு ஒன்றியச் செயலாளர் மார்த்தாண்டன் என்பவரிடமும் இருந்த ஒன்றியச் செயலாளர் பதவிகள் எடுக்கப்பட்டுள்ளது.

 

இவற்றோடு இல்லாமல் எங்கள் இருவரையும் உறுப்பினர் பதவியையும் எடுத்தது தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக உள்ளது. பதவி நீக்கங்களுக்கு காரணமும் தெரியவில்லை. எனது பக்கம் உள்ள நியாயமான விசயங்கள் எனது தலைவர் தளபதிக்கு போய்ச் சேரவில்லை என்று நினைக்கிறேன்.

 

எனவே இன்னும் ஒருசில நாட்களில் தொண்டர்களின் விரும்பினால் சென்னையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்திற்குச் நான் சென்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஏராளமான தொண்டர்கள் உடன் இருந்தனர்.

 

இதன்பின்பு சில தொண்டர்களை சந்தித்து இது குறித்து கேட்டபோது கட்சியில் எந்த விசாரணையும் செய்யாமல் திடீரென பொருப்பாளர்களை பதவி நீக்கம் செய்வதும், உறுப்பினர் பதவியையும் நீக்குவது ஏற்கத்தக்கதல்ல. இது போன்ற சூழ்நிலை தொடர்ந்தால் கட்சியை நாங்கள் எப்படி நம்புவது என்று கூறினார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon