பட்டப்பகலில் சாலையில் ஒருவரை கடித்து குதறிய கரடி..! தெறித்து ஓடிய மக்கள்..!
ஒடிஷா மாநிலம் கால கண்டி மாவட்டத்தில் உள்ள பவானி என்ற நகருக்குள் புகுந்த கரடி ஒன்று ஒருவரை கொடூரமாக தாக்கியதால் மக்கள் பீதியடைந்தனர். வனப் பகுதியிலிருந்து வந்த கரடி ஒன்று அந்த பகுதியில் சுற்றித் திரிந்து உள்ளது.
இதுபற்றி அறிந்ததும் காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் சாலையில் சென்ற நபரை கரடி கொடூரமாக கடித்து குதறியதில் அவர் படுகாயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் இணைந்து கரடியை விரட்டியதால் அது அங்கும் இங்கும் ஓடியது.
மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி அந்த கரடி நகருக்குள் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.






