நீட் தேர்வு நிர்ணயிக்கப்பட்ட படி செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்படும்..!
நீட் தேர்வுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட படி செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதைப்போல ஜெஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா அச்சம் காரணமாக இந்த தேர்வுகளை நடத்த மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் தேர்வை தள்ளி வைக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறி இருந்தது.
இந்நிலையில் இந்த இரு தேர்வுகளும் ஏற்கனவே திட்டமிட்ட தேதியில் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.






