--- --:--:-- --

மாற்றுத்திறனாளி மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்த பள்ளி தலைமை ஆசிரியர். கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவன் !!!

7.6

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சின்னத்துரை.கடந்த ஆண்டு தனது வீட்டின் அருகில் உள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளதாகவும், பத்தாம் வகுப்பில் 193 மதிப்பெண் வாங்கியதாகவும்,தான் 11வது வகுப்பு படிப்பதற்காக ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் தான் படிப்பதற்காக விண்ணப்பித்ததாகவும், அதற்கு தலைமையாசிரியர் உடல் ஊனமுற்ற என்னை சேர்க்க மறுத்து விட்டார் எனவும் தெரிவித்தார்.

மேலும்,தன்னை அவர் உடல் ஊனமுற்றோர் பள்ளியில் சேர சொல்லி கூறியதாகவும், இதனால் தனது கல்வி பாதிப்படைந்துள்ளதால்மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,தனது வீட்டின் அருகில் உள்ள ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வகுப்பு படிக்க மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாகவும் மனுவில் மூலமாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon