--- --:--:-- --

சென்னையில் கொரோனா வீரியம் இன்னும் குறைந்த பாடில்லை..! டாஸ்மாக் திறப்பது மனசாட்சியே இல்லாத செயல்..! டிடிவி தினகரன் கடும் கண்டனம்!!

13.1

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் என அரசை அவர் விமர்சித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்ட மார்ச் 25-ந் தேதி முதல் கடந்த 5 மாதங்களாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் பிற பகுதிகளில் மூடப்பட்ட கடைகள் 45 நாட்களுக்குப் பிறகு கடந்த மே மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

 

சென்னை மற்றும் சுற்றியுள்ள திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததே இதற்கு காரணமாக ப்பட்டது.

 

இந்நிலையில் சென்னையில் இன்னும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. தினமும் பட்டியலில் டாப் இடத்தில் சென்னை உள்ளது. சில நாட்களாக ஆயிரத்திற்கு கீழாக தினசரி பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு தினமும் ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. இந்நிலை நாளை முதல் டாஸ்மாக் சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவு பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

 

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு வெளியே ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்திருந்தும் இப்படியோர் முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

 

கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஏற்கவே முடியாது. எனவே,சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்திடும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon