சுதந்திர தினத்தை முன்னிட்டு காபிதூளில் மகாத்மா காந்தியை வரைந்த நபர்..!
சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தியடிகளின் பிரம்மாண்டமான உருவத்தை காபித்தூளில் சித்திரமாகும் சாட்சி சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை கின்னஸ் சாதனையில் இடம் பெறவும் விண்ணப்பிக்க பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சிவராமன் என்ற ஓவிய கலைஞர் இந்த முயற்சியில் ஈடுபட்டார்.
காபி கொண்டு மகாத்மாகாந்தியின் பொக்கைவாய் புன்னகையுடன் கூடிய அழகான மிகப்பெரிய சித்திரத்தை அவர் 24 மணி நேரத்தில் வரைந்தார். இதன் மூலம் முந்தைய கின்னஸ் சாதனைகளை அவர் முறியடித்துள்ளார். சுதந்திர தினத்தை கொண்டாட மாணவர்களை பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழலில் இந்த வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியது.






