74 வது சுதந்திர தின விழா : பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றினர்..!
இந்தியாவில் 74 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திரதின விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கொரொனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெற்றது. இந்நிலையில் சுதந்திர தின விழா தொடக்கமாக டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி பார்வையிட்டார். சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.






