5 மாத குழந்தையை நரபலி கொடுக்க கேட்ட சாமியார்..! குழந்தையை காப்பாற்றிய தாய்..!
நெல்லை மாவட்டத்தில் புதையல் ஆசை காட்டி ஐந்து மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு நேரம் கோழி மற்றும் கருப்பு பூனையை பலி கொடுத்து புதையல் எடுக்க தயாராக இருக்கின்றனர். அப்போது திடீரென கருப்பு பூனை ஓடிவிடுகிறது. அதற்கு பதில் ஐந்து மாத கைக்குழந்தையை கேட்கிறார் அந்த சாமியார்.
கேட்கும்போதே நெஞ்சை பதற செய்யும் இந்த பயங்கரம் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள இடத்தில் நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த பார்வதி என்ற மூதாட்டிக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள் அவற்றில் மூன்றாவது குழந்தை தான் பலி கொடுக்கப்பட சாமியாரால் கேட்கப்பட்டது.
அதற்கு காரணம் பார்வதி வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புதையல் இருப்பதாக கூறியிருக்கிறார் .அவர் அதை எடுத்து தருவதாக கூறி அவர் இரண்டு லட்சம் ரூபாய் வசூலித்ததாக தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு புதையல் எடுப்பதற்கான பூஜையை தொடங்கியிருக்கிறார்.
சாமியார்அதில் பலியிட வைத்திருந்த கருப்பு பூனை ஓடி விட கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் குமரேசனின் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க கேட்டிருக்கிறார். அவர் அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறியிருக்கிறார். மதுபோதையில் இருந்த குமரேசனைப் பற்றி கவலைப்படாமல் குழந்தையை பலி கொடுக்கவேண்டி உள்ளார் சாமியார்.
அப்போது குமரேசனின் மனைவி ராமலட்சுமி குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அவருடைய கூச்சலை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சாமியாரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பார்வதி மற்றும் குமரேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.






