இந்திய இராணுவத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் திருடிய நபரை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு !!!
கோவை கணபதி பகுதியில் வசித்து வருபவர் தேவராஜன்.இவர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் தான் கணபதி பகுதியில் வசித்து வருவதாகவும், இனையதளத்தின் மூலமாக தனது வீட்டிற்க்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, இணையத்தை பயன்படுத்தி கொண்டு இருந்த பொழுது ஏசி பற்றிய விற்பனை செய்தியை கண்டதாகவும், அந்த விளம்பரத்தை பார்த்ததும் தான் அந்த ஆர்டரை கன்பார்ம் செய்து விட்டு அதில் தரப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது எதிர்முனையில் பேசிய நபர் தனது பெயர் சந்திப் ராவத் எனவும், தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வதாகவும் உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டு நான் காஷ்மீர் செல்ல உள்ளேன் எனவும், இதனால் தனது ஏசியை விற்பனை செய்ய இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,விலை பற்றிய தனது கேள்விக்கு அவர் 13 ஆயிரம் ரூபாய் என கூறியதாகவும்,அதன் பின் நான் உங்களை எப்படி நம்புவது என கேட்டதற்கு அவருடைய ராணுவ அடையாள அட்டை, பேன்கார்டு, லிக்கர் சர்வீஸ் கார்டு, மற்றும் ஏசியை ஆர்மி கேன்டீனில் வாங்கியதற்கான ரசீது அனைத்தையும் அனுப்பி உள்ளார் எனவும்,அதில் இந்திய ஆர்மி கேண்டீன் பல்லாவரம் பகுதியில் வாங்கியதற்கான அனைத்து பில் ரசிதை தனது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி வைத்தார் எனவும்,தான் அவர் அனுப்பிய அனைத்தையும் பரிசோதனை செய்த பொழுது அந்த ஏசி வாங்கியதற்கான பில்லில் உள்ள செல்போன் எண் மற்றும் அவரது எண் அனைத்தும் ஒன்றாக இருந்ததால் இதை உண்மை என முழுமையாக நம்பி அவர் சொன்ன எண்ணிற்கு பணத்தை அனுப்ப முடிவு செய்தேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தங்களுக்கு ஏசி பிடிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை தங்களிடமே ரிட்டன் செய்து கொள்ளலாம் என தெரிவித்ததால் தான் இதனை முழுமையாக நம்பி அவர் சொன்ன அக்கவுண்டிற்கு முதல்முறை ரூ.1150 செலுத்தியதாகவும்,இதனை தொடர்ந்து இரண்டு முறை ரூ.9150 செலுத்தியதாகவும் தெரிவித்தார். ஆனால்,பணம் அனுப்பிய அடுத்த நாள் சென்னை கிண்டியிலிருந்து இந்தியில் ஒருவர் தன்னை அழைத்து பேசியதாகவும், தனக்கு இந்தி தெரியாததால் நான் சந்தீப் ராவத்தை அழைத்து கான்பிரன்ஸ் காலில் பேசியதாகவும், அப்போது,அவர் உங்களுக்கு ஏசி பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும்,ஆனால் நீங்கள் பணம் அனுப்பிய முறை தவறானது எனவும் நீங்கள் பிரித்து, பிரித்து பணத்தை அனுப்ப கூடாது என்றும், ரூ.9500 மற்றும் ரூ.50 தனியாக அனுப்ப வேண்டும் எனவும், தனித்தனியாக அனுப்ப வேண்டுமென தன்னை நன்றாக குழப்பி, இது வரை ரூ.31,500வரை செலுத்த வைத்து விட்டனர்.
ஆனால்,நீங்கள் தவறுதலாக எத்தனை முறை பணம் அனுப்பினாலும், அந்த பணம் உங்களுக்கு திரும்ப வந்துவிடும் என கூறியதாகவும், எனவும், இந்திய இராணுவத்தில் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானது. அதனால் தான் உங்களின் புக்கிங்கை, சரியாக பதிவு செய்ய முடியவில்லை என்றும்,மீண்டும் நீங்கள் ரூ.18,300ஐ நான் சொல்லுவதை போல கட்டுங்கள் என கூறினார். இதில் சந்தேகமடைந்த தான் நண்பர்களிடம் இது குறித்து கேட்டதாகவும், நண்பர்கள் இது பொய்யான தகவல் என கூறியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் தான் பணத்தை மீண்டும் கட்டவில்லை எனவும், இதனால் நீங்கள் பணம் கட்டாததால் ஏசி மீண்டும் இந்திய இரானுவ கிடங்கிற்கு வந்துவிட்டது என தெரிவித்து போனை துண்டித்து விட்டதுடன், அலைபேசியை அணைத்து வைத்து விட்டதாக புகார் மனுவில் குறிப்பிட்டுருந்தார் தேவராஜன்.
மேலும்,இது குறித்து சரியான நடவடிக்கை எடுத்து இந்திய இராணுவத்தை தவறாக பயன்படுத்திய நபரை கைது செய்து தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






