அரை சவரன் நகைக்காக 80 வயது மூதாட்டியை கொலை செய்த 8 வயது சிறுவன்..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரை சவரன் நகைகளை மூதாட்டியை கொலை செய்த 8 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். குவாகம் கிராமம் காவடி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவகாமி காவல் நிலையம் அருகே உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிவகாமி மர்மமான முறையில் உயிரிழந்த கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் அணிந்திருந்த அரை பவுன் நகைக்காக அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் சிறுவன் ஒருவர் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






