--- --:--:-- --

பிளஸ் 2 தேர்வை தன் மகனுடன் சேர்ந்து எழுதிய பெற்றோர்..! 80 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி..!

32

கேரளாவில் தன் மகனுடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய தாயும், தந்தையும் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். மலப்புரம் அருகே மங்களா கிராமத்தை சேர்ந்த முஸ்தபா என்ற தொழிலதிபர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினார். இவரது மனைவி நுசைபா பன்னிரெண்டாம் வகுப்பை பாதியில் நிறுத்தியவர்.

 

தற்போது வசதியாக இருந்தாலும் +2 முடிக்காதது இந்த தம்பதிக்கு குறையாகவே இருந்தது. இந்த குறையை கேரள எழுத்தறிவு மிஷனின் சமநிலை தேர்வுகள் போக்கியிருக்கிறது. அந்த திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இந்த தம்பதியின் மகனான சாம்னாசும் அதே பிளஸ் டூ தேர்வு எழுதினார்.

 

தற்போது வெளியான தேர்வு முடிவுகளின் படி பெற்றோரும், மகனும் 80 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தேர்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்க முஸ்தபா தம்பதியோ தங்கள் வெற்றியையும் சேர்த்துக் கொண்டாடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon