--- --:--:-- --

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!

30

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான பல்லவராயன் குடிகாடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் உடலுக்கு அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் புல்லவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த திரு மூர்த்தி கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த திருமூர்த்தி கடந்த 25ஆம் தேதி பணியில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் கண்ணில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதனையடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ,மாவட்ட ஆட்சியர் டிஎஸ்பி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட குடும்பத்தினருடன் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon