--- --:--:-- --

தமிழகம் முழுவதும் இன்று முழு பொது முடக்கம் அமல்..!

20

கொரொனா பரவலை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இன்று முழுவதும் பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்து பொது முடக்கத்தை நீட்டித்து வருகிறது. எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இன்று மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்கப்படாத நிலையில் அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியே நடமாட கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon