காதலனின் தந்தை திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காதலனின் தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அடுத்த சைதாப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்ற நர்சிங் மாணவி வெண்ணிலாவும், அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
தந்தை நாகராஜ், பிரசாத் காதல் விவகாரம் தெரிந்ததால் மாணவி வெண்ணிலாவை அவர் கண்டித்துள்ளார். மேலும் வெண்ணிலா வீட்டிற்கு சென்ற நாகராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வெண்ணிலா மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.
வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






