--- --:--:-- --

மதுரையில் டோர் டெலிவெரி செய்யப்படும் கஞ்சா…!

4

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவெரி செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகமலை, புதுக்கோட்டை பகுதியில் செல்போனில் தொடர்பு கொண்டவுடன் இருசக்கர வாகனம் மூலம் டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து மேல குயில்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சிவனேஸ்வரன் என்பவருடன் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சாவை டோர் டெலிவரி மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து சிவனேஸ்வரனை கைது செய்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் அவரிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் எடையுள்ள கஞ்சாவையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

கஞ்சா விற்பனையில் நல்ல வருமானம் கிடைப்பதாக தெரிவித் சிவனேஸ்வரன் ஆடம்பர செலவுக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். எங்கிருந்து வாங்கப் படுகிறது என்பது குறித்து சிவனேஸ்வரன் நாகமலை, புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon