சிவகங்கை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்..!
சிவகங்கை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 1.60 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை கதர் அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் புதிப்பிக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 1.60 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பிச்சம்மை கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் 18 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கொரோனா சிறப்பு வார்டை திறந்து வைத்து பார்வையிட்டு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார். உடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கருணாகரன் உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






