--- --:--:-- --

தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு : தொற்று பாதிக்கப்பட்டோர் 5881…! உயிரிழந்தோர் 97 பேர்!!

7987

தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 5,881பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரையிலான தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து 7 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழாக இறங்கிய நிலையில் இன்றும் 5881 என தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

 

இதில் சென்னையில் மட்டும் பாதிப்பு மேலும் குறைந்து 1,013 ஆகியுள்ளது. சென்னையில் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி 99,794 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது.

Subscription

இன்று சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் 485, திருவள்ளுர் 373, ராணிப்பேட்டை 359, விருதுநகர் 357, செங்கல்பட்டு 334, தேனி 299, தூத்துக்குடி 282, நெல்லை 222 என அதிகபட்சமாக பாதிப்பு பதிவாகியுள்ளது.

 

மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,778ஆகும். இதனால் இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,83,956ஆக உயர்வு. இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 3,935ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon