சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!
சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த வார்டு வாரியாக உதவி பொறியாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
களப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பொது துறை தலைமை பொறியாளர் நந்தகுமார் உட்பட 35 பொறியாளர்களை கொரொனா தாக்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.






