--- --:--:-- --

நண்பன் பட பாணியில் பெண்ணுக்கு வீடியோ கால் மூலம் பிரசவம்…!

8

ஊரடங்கு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் நடிகர் விஜய்யின் நண்பன் திரைப்பட பாணியில் வீடியோகால் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹணகல் பகுதியைச் சேர்ந்த வாசவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

 

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பெண் மருத்துவர் ஒருவர் வாட்ஸ்அப் விடியோ கால் மூலம் அறிவுரை வழங்க கிராம மக்கள் அதன்படி பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர் .இதன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon