--- --:--:-- --

கண் தொடர்பான பிரச்சனைகளும் கொரொனாவுக்கு அறிகுறியா?

11

ண்களில் ஏற்படும் பாதிப்புகள் கூட கொரொனா தாக்கமாக இருக்கலாம் என மருத்துவத் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் துறையின் மூத்த மருத்துவர் கருத்தரங்கில் பேசும்போது தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 

கொரோனா வைரஸ் வாய், மூக்கு மட்டுமின்றி கண்கள் வழியாக பரவுவதாக அவர் கூறினார். கண்கள் சூடான தன்மையுடன் இருத்தல் கடுமையான எரிச்சல், தொடர்ந்து தண்ணீர் வடிதல், பிசுபிசுப்பு தன்மை மற்றும் கண்களில் கூச்சம் ஆகியவை அதிகம் இருந்தால் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மற்றவர்களிடமிருந்து தனித்து இருக்குமாறு கேட்டுக் கொண்டவர், மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் கண்களுக்கு சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon