கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்க மறுப்பு..!

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதற்கு தடை கோரி காஞ்சிபுரம், வேலூர், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட எதிர்த்தரப்பு வழக்கறிஞர் வங்கிகளை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறினார். மத்திய அரசு அவசரச் சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதுமில்லை என்று நீதிபதிகள் அவ்வாறு இருந்தால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரலாம் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.


Leave a Reply