பிஹாரில் மின்னல் தாக்கியதில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பூர்னியா, பெகுசராய், சாம்பரன், மதேபூரா உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பீகாரில் கடந்த மூன்று வாரங்களில் மின்னல் தாக்கியதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்தின் இறுதியில் 21 மாவட்டங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!!
தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக உயர்வு..!
இஸ்ரேல் - ஈரான் மோதல் : வான் முழுவதும் பாயும் டிரோன்கள், ஏவுகணைகள்
விஜய் ரூபானி இல்லம் சென்ற மோடி..!
ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை..!
பிரதமருடன் ஏர் இந்தியா CEO சந்திப்பு..!