இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரணத் தொகை ரூ .1000 பெறாத மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலினை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அந்தவகையில் , மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு தலா ரூ . 1000 ரொக்க நிவாரணமாக அவர்கள் வீட்டிலேயே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 28,937 நபர்களில் இதுவரை 17,226 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இந்த நிவாரண நிதியைப் பெறாதவர்கள் , தங்களின் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் , ஆதார் அட்டை நகல் மற்றும் ஒரு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது .
நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் தொலைபேசி 04567-231410 மற்றும் உதவி மறுக்கப்படும் நேர்வில் அல்லது கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில மைய எண் : 1800 425 0111 – ல் தொடர்பு கொள்ளலாம் . பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ் ஆப் மற்றும் வீடியோ காலில் எண் : 9700799993 – ல் தொடர்பு கொள்ளலாம் . மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.