பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தொட்டுள்ளது. டுவிட்டர் சமூக தளத்தில் மிக அதிகம் பின் தொடரப்படும் இந்தியர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பிரதமரை பின் தொடர்பவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2009ஆம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ஒன்றரை கோடி பேர் ட்விட்டர் தளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை உலகெங்கும் 8 கோடியே 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.