தமிழகத்தில் கொரோனா நிலவரம் : இன்று 4985 பேருக்கு தொற்று உறுதி… உயிரிழந்தோர் 70 பேர்
53295658
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்று உயர்ந்த நிலையில், 70 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 1298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்றும் இன்றும் பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. சென்னையில் தொற்று எண்ணிக்கை தமிழக மொத்த பாதிப்பில் கால்வாசி என்ற அளவுக்கு தொடர்ந்து குறைந்து வருவது தான் சென்னைவாசிகளுக்கு ஆறுதலான விஷயமாக உள்ளது.
இன்றைய கொரோ பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நேற்று 4979 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,75,678ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 3,861ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,21,776ஆகவும் உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்த நிலையில் இது வரை பலி எண்ணிக்கை 2,551ஆக உயர்ந்து உள்ளது. இதில் 49 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on Xஇன்று சென்னையில் மட்டும் 1298 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 87,235 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்றைய தொற்று பாதிப்பு 3687 ஆகும். திருவள்வூரில் 454, காஞ்சியில் 329, கோவை 139, தேனி 107, திருவண்ணாமலை 151, தூத்துக்குடி 200 , நெல்லை 180 , வேலூர் 114, விருதுநகர் 169,மதுரை 106 என இன்று மாவட்டங்களில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






