சார்பு ஆய்வாளர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடா?

சார்பு ஆய்வாளர் பதவிகளை நிரப்ப நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையை சேர்ந்த தென்னரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் காலியாக உள்ள 969 எஸ்‌ஐ பணியிடங்களை நிரப்ப சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

ஒரே பயிற்சி மையத்தில் 144 பேர் தேர்வாகியுள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில் முகவரியை மாற்றிக் கொடுத்து பலர் வெளிமாவட்டங்களில் தேர்வு எழுதியுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே எஸ்‌ஐ எழுத்துத் தேர்வு செல்லாது என அறிவித்து புதிதாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் இதுகுறித்து உள்துறை செயலாளர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் தமிழக காவல் துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


Leave a Reply