திருவாடானையில் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்..!
திருவாடானையில் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வழியாக மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் திருவாடானை, கடம்பாடி, திணையத்தூர், அச்சங்குடி ஆகிய பகுதிகளில் மாடுகளை அதன் உரிமையாளர் இரவு பகல் கட்டாமல் விட்டுவிடுவதால் அவை அனைத்தும் சாலைகளை மறைத்து நின்றுகொள்கிறது.
இதனால் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நிற்கும் கால் நடைகள் திடீரென ஒன்றுடன் ஒன்று முட்டி சண்டையிட்டு ஓடுவதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி உயிரிழக்கும் ஆபத்தான நிலை உள்ளது. சாலைகளில் சுற்றிதிரியும் வாகனங்களை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே இதை தவிர்க்க முடியும் என்று என்று வாகன ஒட்டிகள் தெரிவித்தார்கள்.






