வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க 170 விமானங்கள்!
வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்ப விரும்பும் நபர்களுக்காக 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 13 நாட்கள் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட 17 நாடுகளுக்கு மொத்தம் 170 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையே 38 விமானங்களும், இந்தியா, அமெரிக்கா இடையே 32 விமானங்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.






