--- --:--:-- --

டிரம்ப் பதிவிட்ட வீடியோ ட்வீட்டால் அதிகரிக்கும் சர்ச்சை..!

8.1

வெள்ளையர் அதிகாரத்தை சுட்டிக்காட்டும் வீடியோ ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுட்விட் செய்தது சர்ச்சையாகி உள்ளது. புளோரிடா மாகாணத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் பார்த்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டனர்.

 

அப்போது டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் வெள்ளை இன மக்களுக்கு அதிகாரம் இருப்பதாக கூறி கூச்சலிட்டார். இதனை சிலர் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் அதிபர் டிரம்ப் அதே பக்கத்தை மறுட்விட் செய்துள்ளார். ஜனநாயக கட்சியினர் மீண்டும் வீழ்ச்சி அடைவார்கள் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

 

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து குடியரசு கட்சியைச் சேர்ந்த கறுப்பின செனட் சபை உறுப்பினர் டிரம்புக்கு சுட்டிக்காட்டினார். இதனையடுத்து இனப் பாகுபாட்டை குறிக்கும் ஆதரவாளர்கள் பதிவு
ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon