மீண்டும் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ள சீனா
கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி அமைத்த கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவத்தினர் அகற்றி இருக்கும் நிலையில் மீண்டும் அங்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இந்திய எல்லைப் பகுதியில் சீனா அமைத்து இருந்த கண்காணிப்பு கோபுரம் காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்களில் நீக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம் மீண்டும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
மேலும் சமீபத்திய பேச்சுவார்த்தையின்போது துருப்புகளை முழுமையாக பின்வாங்குவதாக கூறிய சீனா மீண்டும் எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி அதிகளவில் துருப்புகளை அமைப்பதாக பதிவாகியுள்ளது.






