போலி இ-பாஸ் விவகாரத்தில் தலைமைச் செயலக ஊழியர் கைது!
அரசு இ – பாஸ்களை சட்டவிரோதமாக விற்றதாக சென்னையில் தலைமைச் செயலக ஊழியர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கொரொனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில் திருமணம், இறப்பு மருத்துவ அவசர சிகிச்சை ஆகியவற்றுக்காக வெளியே செல்ல அரசு ஐ பாஸ் வழங்கி வருகிறது. இத்தகைய இ பாஸ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வது, போலி இ பாஸ்களில் பயணம் செய்வது என்று பலர் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து செல்வதற்காக சட்டவிரோதமாக இ பாஸ்களை பணத்திற்கு விற்றதாக தலைமை செயலக ஊழியர், மாநகராட்சி ஊழியர், ஆட்சியர் அலுவலக ஊழியர் உட்பட 5 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான ஐந்து பேரில் இரண்டு பேர் டிராவல்ஸ் வைத்திருப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அரசு இ பாஸ்களை போலியாக தயாரித்து 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்றது கண்டறியப்பட்டுள்ளது.






