--- --:--:-- --

கர்நாடகாவில் கொரொனா அச்சத்தின் இடையே 10ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்!

12

கொரொனா அச்சுறுத்தலால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கிடையே கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.

 

8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவதால் பெற்றோர்கள் நோய் தொற்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடகாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தான் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இன்று தேர்வுகள் துவங்குகின்றன.

 

முன்னதாக தேர்வு மையங்கள் அனைத்தும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகளை மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் நேரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

ஒவ்வொரு தேர்வு அறையிலும் 18 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அது பெரியதாக இருந்தால் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் தனிமனித இடைவெளியே பராமரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாணவரும் தெர்மல் ஸ்கேனர் மூலமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon