விண்வெளியில் தோன்றியுள்ள புதிய மர்மப் பொருள்..!
விண்வெளியில் புவியீர்ப்பு நுண் அலையில் சிக்கிய பொருள் சிறிய அளவிலான கருந்துளையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் பீசா நகரில் உள்ள ஐரோப்பிய புவியியல் ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பொருள் சிறிய அளவிலான கருந்துளை அல்லது மிகப் பெரிய நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என அனுமானித்துள்ளனர். அந்த மர்ம பொருள் நமது சூரியனை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புவியீர்ப்பு சென்சார் அலைகளை பயன்படுத்தி அந்த மர்ம பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




