--- --:--:-- --

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா, ரஷ்யா, சீனா நடத்திய 11 மணி நேர பேச்சுவார்த்தை!

8

லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியா – சீனா ராணுவ மேஜர் ஜெனரல் அளவில் 11 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி சீன ராணுவத்தினரின் அத்துமீறல்களை தடுக்கும் போராட்டத்தில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

 

பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர மொல்டா பகுதியில் இந்தியா – சீனா ராணுவ மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 11 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள இரு நாட்டு தரப்பிலும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதனிடையே லடாக் எல்லைக்கு சென்ற ராணுவ தளபதி மனோஜ் முகுந்து நரவனே நடக்கும் மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்து பேசினார். எல்லையில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் திகழும் வண்ணம் செயல்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யா, இந்தியா, சீனா இடையே காணொளி வாயிலாக நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

 

அப்போது பேசிய ஜெய்சங்கர் சர்வதேச விதிகளை மதித்தல், உலக நாடுகளில் ஒற்றுமையை ஆதரித்தல், பொது நலத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலமே உலக நன்மைகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்ச்சில் பேசுகையில் இரு நாடுகளும் அமைதியான முறையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon