--- --:--:-- --

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்!

9

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரொனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மருத்துவப் படிப்புகளை மாணவர்கள் சிரமமில்லாமல் எதிர்கொள்ள இணைதளம் மூலம் பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

கட்டணம் இல்லாமல் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்க e-box என்ற நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

அதன்படி இணையதளம் மூலம் ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா ஒரு மணி நேரம் என தினமும் 4 மணி நேர பயிற்சியையும் பயிற்சி முடிந்தவுடன் அன்றைய தினமே நான்கு மணி நேர பயிற்சி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்த பயிற்சியினை பெற 7,420 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon