முன்கூட்டியே தனது ட்விட்டர் மூலம் தனது தற்கொலையை உணர்த்தியுள்ளாரா சுஷாந்த்!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் கவர் படம் மூலம் முன்கூட்டியே அவர் தற்கொலையை உணர்த்தி இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நிறைந்து காணப் படுகிறார்.
பாலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா சினிமா ரசிகர்களை அவர் தற்கொலை ஆட்கொண்டுள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
கழுத்து இறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே அவரது மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. சுஷாந்த் டுவிட்டர் பக்கத்தில் உள்ள கவர் படம் அவரது தற்கொலை எண்ணத்தை பிரதிபலிப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த ஸ்டாரிநைட் கவர் படம் நெதர்லாந்தின் புகழ் பெற்ற ஓவியர் வின்சன் வான்காக் வரைந்தது.

மன அழுத்தத்தில் இருக்கும் போது அவர் இந்த ஓவியத்தை வரைந்ததாக கூறப்படுகிறது. வறுமையின் பிடியில் இருந்த ஓவியர் வான்காக் 1890 ஆம் ஆண்டு தனது 37வது வயதில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
எனவே வான்காக் தீட்டிய ஸ்டாரிநைட் ஓவியத்தை தற்கொலை எண்ணத்திலே ட்விட்டர் கவர் படமாக வைத்துள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும்சுசாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






