மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% கோரும் வழக்குகள் இன்று விசாரணை!
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு என தனியாக எந்தவித ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல்மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி திமுக, அதிமுக கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதன்படி திமுக, அதிமுக, மதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன .இந்தநிலையில் வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளன.






