--- --:--:-- --

காலாவதியான ஹஜ் கமிட்டியை மாற்றி அமைத்தது தமிழக அரசு!

12

மாநில ஹஜ் கமிட்டியின் காலாவதி முடிவடைந்ததை அடுத்து தமிழக அரசு புதிய உறுப்பினர்களை நியமித்து ஹஜ் கமிட்டியை மாற்றி அமைத்துள்ளது.

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட ஆணையில் மக்களவை உறுப்பினர் முகமது ஜான் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, முஹம்மது அபூபக்கர், ஹஜ் கமிட்டியின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் உள்ளிட்ட 12 பேரை உறுப்பினர்களாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தல்கள் முழுமையாக நடந்து முடிந்த பிறகு அவற்றிலிருந்து மூன்று பேரும் ஹஜ் கமிட்டி தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு வக்ஃப் போர்டு தலைவரும் ஹஜ் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய ஹஜ் கமிட்டியின் ஆயுள் 3 ஆண்டுகள் ஆகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon