--- --:--:-- --

5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை!

4

கர்நாடகாவில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடைவிதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த மாநில கல்வித்துறை வெளியிட்டிருக்கும் உத்தரவில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் காணொலிக் காட்சி மூலமாகவோ அல்லது வீடியோ பதிவுகள் மூலமாகவோ கல்வி கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அரசு பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், ஐ‌சி‌எஸ்‌சி பள்ளிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் என மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon