--- --:--:-- --

சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்த ஃபெப்சி அமைப்பு அறிவுறுத்தல்

5

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரசு பொது முடக்கத்தை அறிவித்திருப்பதால் வரும் 19 ஆம் தேதியிலிருந்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்துமாறு பெப்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

 

சின்னத்திரை படப்பிடிப்புகள் மட்டுமின்றி சினிமாகளுக்கான போஸ்ட் புரடக்ஷன் வேலைகளையும் வரும் 19 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நிறுத்துமாறு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.

 

சுமார் 80 நாட்களுக்கு பிறகு கடந்த எட்டாம் தேதி மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரம் முதல் சின்னத்திரை தொடர்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளும் சின்னத் திரைத் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டிருந்தனர்.

 

இந்த நிலையில் தமிழக அரசு மீண்டும் ஊரடங்கு அறிவித்திருப்பதால் வரும் 18 ஆம் தேதியுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு பெப்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon