--- --:--:-- --

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பாக சபாநாயகருக்கு முதல்வர் கடிதம்!

3

11 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் சபாநாயகருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கு மட்டுமே கொறடாவின் உத்தரவு அனுப்பப்பட்டு இருந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டதால் அவர்களுக்குத் கொறடா உத்தரவு தரப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதிமுக பேரவை கட்சி தலைவராக தன்னை தேர்வு செய்த 122 பேருக்கு மட்டும்தான் கொறடா உத்தரவு தனித்தனியாக அனுப்பப்பட்டு இருந்தது என்று முதல்வர் கூறினார்.

 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் முதல்வர் கூறியிருக்கிறார்.

அரசுக்கு எதிராக 11 எம்‌எல்‌ஏக்கள் வாக்களித்து இருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என்றும் 11 எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டு இருந்தாலும் தற்போது ஒரே அணியாக செயல்படுகிறோம் அதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது என்று முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

11 எம்எல்ஏக்களும் அதிமுகவில் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்து இருந்த சமயத்தில் தாக்கல் செய்யப் பட்டவை என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார் .

 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon