கொரோனாவின் வெற்றிக்கு பிறகு இருவரும் சேர்ந்து சமோசாவை சுவைக்கலாம்! மோடியின் ட்வீட்!
இந்திய பிரதமருக்கு சமோசா பரிசளிக்க விரும்புவதாக கூறிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசனுக்கு மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் இந்தியப் பெருங்கடலால் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து உள்ளதாகவும், இந்தியாவின் சமோசாவால் இரண்டு நாடுகளும் ஒன்று இணைவதாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
கொரொனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு இருவரும் சேர்ந்து சமோசாவை சுவைக்கலாம் என்று கூறிய மோடி வரும் நான்காம் தேதி இருவருக்கும் இடையே நடக்கவுள்ள இருதரப்பு காணொளி உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மோடிக்காக தான் தயாரித்த சமோசாவுக்கு ஸ்கொமொசாஸ் என பெயரிட்டு ட்விட்டரில் வெளியிட்டு ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் கிடைத்துள்ளன.






