சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்தப்படும்!
எஞ்சியிருக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு ஆகியவை மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
அந்த தேர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அண்மையில் சிபிஎஸ்சி அறிவித்தது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் சிபிஎஸ்சி தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்தப்படும் என்றும் வேறு தேர்வு மையங்களில் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதே போல அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.






