கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 4 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.வாகன போக்குவரத்தும் இல்லை.
ஊரடங்கின் காரணமாக வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால் யானை,காட்டெருமை,மான் உள்ளிட்ட வன விலங்குகள் உணவு,தண்ணீரை தேடி ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ” ஹாயாக ” வலம் வந்து சென்றன.மனித – வன உயிரின மோதல் பெரிய அளவில் இல்லை.இந்த நிலையில் 3 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இதனால் வாகன போக்குவரத்து துவங்கியது.
தற்போது வாகன போக்குவரத்து துவங்கியுள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளின் வழியாக மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால் மனித – வன உயிரின மோதல் நடைபெற வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் வனப்பகுதி வழியாக இளைஞர்கள் இருவர் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது, சாலையை கடக்க முயன்ற யானை அவர்களை துரத்த தனது டூவீலரை கீழே போட்டு விட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.இதுகுறித்த பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.