அரசு நிவாரணம் வழங்கிட கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

கொரானா வைரஸ் காரணமாக ஊடரங்கு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்கள் பாதிக்கப்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்கிட கிராமிய கலைஞர்கள் மேள தாளம் முழங்க அம்மன் வேடம் அணிந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 

கொரனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் பல்வேறு தொழில்களும் செயல்படாமல் முடங்கி போனது. தற்போது சில தொழில்களுக்கு நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் கோயில் திறக்க அனுமதி வழங்காததால், திருவிழாக்கள் நடைபெறாமல் போனது.

இதனால் திருவிழாவில் நடைபெறும் நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் போனதால், கிராமிய நாட்டுபுறக்கலைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வேதனையில் உள்ளனர். மேலும் அதிக திருவிழாக்கள் நடைபெறும் மாசி, பங்குனி, வைகாசி மாதங்களில் ஊரடங்கால் தங்களது தொழில் நடைபெறாததால், வருமானமின்றி வாடி வருகின்றனர்.

 

ஆதலால், கிராமிய கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தங்களது கலை தொழில்கள் நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என்று அம்மன், சிவன், வேடம் அணிந்து, மேள தாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை, சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


Leave a Reply