தீவிர புயலாக மாறிய அம்பன் புயல்!
வங்கக்கடலில் உருவான அம்பன் அதி உச்ச உயர் தீவிர புயலாக வலு பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கிலோ மீட்டர் தொலைவில் அதிஉச்ச உயர் தீவிர புயலாக அம்பன் மையம் கொண்டிருப்பதாகவும் தற்போது இந்த புயல் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அம்பன் புயல், ஒடிசா, மேற்கு வங்கம் இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






